பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு: ஒருவர் கைது

பாட்னா:

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. செருப்பை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில தலைநகரில் நடைபெற்ற ஜனதாதள் கட்சியின்  இளைஞர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினா;ர். அப்போது,  அவுரங்கபாத்தை  சேர்ந்த சாந்தன் குமார் என்ற நபர் இடஒதுக்கீடு காரணமாக வேலை பெற முடிய வில்லை என்று கூறி, முதல்வர் மீது செருப்பை வீசினார். அவரை உடடினயாக காவல்துறையினர் கைது செய்தனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் நிதிஷ் குமார் கட்சி அமைப்பினர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.  கட்சியின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு ஆலேசனை நடத்தி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மகளிர் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக பாட்னாவில் உள்ள மகா தலித் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த நிலையில், சமீபத்தில் எஸ்சி, எஸ்டி தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல மாநிலங்களில் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கே சலுகைகள் வழங்கி வருகிறது என்று உயர் சாதியினரின் கோபத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், அவுரங்கபாத்தை சேர்ந்த சாந்தன்குமார் என்ற மேல்சாதியை சேர்ந்தவர் ஏற்கனவே  இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர். அவர்  “இட ஒதுக்கீடு காரணமாக  அரசு வேலை பெற முடியவில்லை என்று கூறி முதல்வர்மீது செருப்பை வீசினார்.

உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.