பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது
சென்னை:
இன்று பெரியார் 140வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் கம்பெனி எதிரில் உள்ள பெரியார் சிலை அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமீது இன்று காலை யாரோ மர்ம நபர் செருப்பு வீசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், செருப்பை வீசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவரும் சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கைஒழிப்பு, பெண் விடுதலைக்காக போராடிய ஈ.வே.ரா. பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்படுகிறது. அவரது உருவப் படத்துக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் மரியாதை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை, அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை பகுதிக்கு வந்த ஒருவர் திடீரென பெரியார் சிலை மீது செருப்பை தூக்கி வீசினார்.
இது அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவரை மடக்கிய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (வயது 35) என்பது தெரிய வந்தது. அவரையும், அவர் வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.