’ஷோலே’ பட சூர்மா போபாலியாக நடித்த காமெடி நடிகர் மரணம்..

ர்மேந்திரா, அமிதாப்பச்சன் இணைந்து நடித்த ஷோலே படம் 1975ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சூர்மாபோபாலி என்ற காமெடி வேடத்தில் நடித்தவர் ஜகதீப். இவர் மும்பையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. வயது தொடர்பானபிரச்னை காரணமாக அவர் மரணம் அடைந்தார். மும்பையில் உள்ள ஷியா கப்ரிஸ்தானில் ஜகதீப் இன்று உடல் அடக்கம் நடக்கிறது.


1970 தொடங்கி 90கள் வரை ஜகதீப் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 1988 ஆம் ஆண்டில் சூர்மா போபாலி என்ற பெயரில் ஒரு படம் டைரக்டு செய்தார். மறைந்த ஜகதீப் மார்ச் 29, 1939 இல் பிறந்தார். இவருக்கு மகன்கள் ஜாவேத் ஜாஃப்ரி மற்றும் நவேத் ஜாஃப்ரி உள்ளனர்.
ஜகதீப் மரணத்துக்கு அஜய்தேவ்கன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.