மீண்டும் இணையும் சிவா – பிரியா ஆனந்த் ஜோடி…!

`வணக்கம் சென்னை’ படத்துக்குப் பிறகு, ப்ரியா ஆனந்துக்கு ஜோடியாக சிவா நடிக்கும் படம் சுமோ .

ஹோசிமின் இப்படத்தை இயக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜப்பானில் புகழ்பெற்ற `சுமோ’ விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதால் , இந்தப் படத்தில் நிறைய சுமோ விளையாட்டு வீரர்களும் நடித்துள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.