கொரோனா பாதிப்பு உறுதியானவர்களை சுட்டுத்தள்ள வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருவதுடன், உலக பொருளாதாரத்தையே சிதைத்து உள்ளது. ஆனால், வடகொரியாவில் மட்டும், கொரோனா தாக்கம் குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளிவருவதில்லை. வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என அந்நாட்டு அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது. இது உலக நாடுகளை சந்தேகம் கொள்ள வைத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், உடனே அவர்களை சுட்டுக்கொல்ல அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளதாக  ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

சமீபத்தில்,  தென்கொரியா நபர் மூலம், வடகொரியாவில் தொற்று பரவியதாகவும், இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுவது குறித்து, அதிபர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, சீனா – வடகொரியா எல்லை யிலிருந்து அரைமைல் தூரத்திற்குள் யாராவது தென்பட்டாலோ, அவர்களை உடனே சுட்டுக்கொல்ல வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவு கடந்த வியாழன் முதல் அமலுக்கு வந்தது என அந்நாட்டு அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.