இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை பதிவு செய்தார் இந்தியாவின் துஷர் மானே

இளையோருக்கான ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் துஷர் மானே வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் துஷர் மானே பதக்கம் பெற்றார்.

tushar

கோடைக்கால இளையார் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு துப்பாக்கிச்சூடு போட்டியில் இந்தியா சார்பில் துஷர் மானே கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் 247.5 புள்ளிகளைப் பெற்ற அவர் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். துஷர் வென்ற பதக்கம் இந்தியா இத்தொடரில் பெற்ற முதல் பதக்கமாகும்.

ரஷ்யாவின் கிரிகோரி ஷகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் செர்பியாவின் அலெக்சா மிட்ரோவிக் 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.