நாளை ரக்ஷா பந்தன்: குஜராத்தில் மோடி உருவம் பொறித்த தங்க ராக்கி விற்பனை

அகமதாபாத்:

நாளை வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதை யொட்டி, நாடு முழுவதும் ராக்கி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வட மாநில பெண்களிடையே ரக்ஷா பந்தன் அன்று  தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவது வழக்கம்.  இந்த நிலையில் குஜராத்தில் உள்ள நகைக்கடைகளில் வைரம் மற்றும் தங்கத்திலான ராக்கிகள் விற்பனை செய்யப்பட்டடு வருகின்றன.

ரூ.50 ஆயிரம் விலை முதல் 70 ஆயிரம் ரூபாய்  வரையிலான 22 காரட் தக்கத்திலான  பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி  போன்றோரின் படங்கள்  பொறிக்கப்பட்ட தங்க ராக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள பிரபலங் நகைக்கடைகளில் இந்த தங்க ராக்கிகள் விற்பனை செய்யப்படுகிறது.

மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய ராக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களது சகோதரர்களுக்கு கட்டுவதற்காக, இவ்வகை ராக்கிகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ராகியைப்  கட்டுவதன்  மூலம் எனது சகோதரர் பிரதம மந்திரி மோடி போன்று வாழ்வில் உயர நான் ஆசீர்வதிப்பேன் என்று வாடிக்கையாளர் ஒருவர் கூறி உள்ளார்.