காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி

--

ஸ்ரீநகர்:

ம்முகாஷ்மீர் மாநிலத்தில்  சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் பகுதியில் உள்ள நேப்கம் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக் கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில்,  4 பயங்கரவாதிகள் சுட்டுகொள்ளபட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் கொட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் அவ்வப்போது அவர்களை வேட்டையாடி வருகின்றனர். இருந்தாலும் பயங்கரவாதிகளின் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள நேப்கம் கிராம பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து  அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் நேப்கம் கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

இதையறிந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில்,  பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. , சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

View image on Twitter
ANI
✔@ANI

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

You may have missed