ரயிலில் ஷாப்பிங் செய்யலாம்! மேற்கிந்திய ரயில்வே அறிமுகம்

டும் ரயிலில், பயணியர், ‘ஷாப்பிங்’ செய்யும் வசதி, வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து துவங்கப்பட இருப்பதாக மேற்கு இந்திய  ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

காலமாற்றத்துக்கு ஏற்ப ரயில்வே துறையும் பயணியருக்கு பல வசதிகளை செய்துவருகிறது. முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க ஆப் வசதி, சில ரயில்களில் வைபை சேவை போன்றவற்றை செய்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கிந்த ரயில்வே பயணத்தில் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல மறந்த பயணியரின் வசதிக்காக, ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் வசதியை ஏற்படுத்த இருக்கிறது.

மேற்கு ரயில்வே மண்டலத்தின், 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில், இந்த ‘ஷாப்பிங்’ வசதி இருக்கும். இத் திட்டத்திற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ரயிலில், சீருடை அணிந்த இரண்டு விற்பனையாளர்கள், பொருட்கள் அடங்கிய, ‘டிராலி’யுடன் வருவர். அவர்களிடம் இருந்து, பயணியர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பயணத்தின்போது பயணிகளுக்கு தேவைப்படும் பேஸ்ட், பிரஷ், சோப்பு, துண்டு, சேவிங் க்ரீம் போன்ற பொருட்கள் விற்கபனை செய்யப்படும். மேலும் அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் உடற்பயிற்சி கருவிகளும் விற்பனை செய்யப்படும்.

அதே நேரம் உணவுப் பொருள், சிகரெட், புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதி கிடையாது.

இங்கு கிடைககும் பொருட்கள் குறித்த பட்டியல் பயணியருக்கு வழங்கப்படும். ஆகவே  வழங்கப்படுவதால், தங்களுக்கு தேவையானவற்றை பயணிகள் எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.

 

முதல்கட்டமாக, வரும் ஜனவரி முதல் வாரத்தில், மும்பையில் இருந்து இயக்கப்படும் இரண்டு ரயில்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பிறகு படிப்படியாக மற்ற ரயில்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று, ரயில்வே அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.