கோவில் வளாகத்தில் கடைகள்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி:

மிழகத்தில் கோவில் வளாகத்திற்குள் கடைகள் வைக்க தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில்: தமிழகஅரசின் அரசாணையை உச்சநீதி மன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள கடை ஒன்றில் கடந்த  ஆண்டு தீ பிடித்தில் பல  கடைகள் எரிந்த நிலையில், கோவிலின் மண்டபமும் சேதமடைந்தது. இது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து  ஆய்வு செய்தி அதிகாரிகள் கோவில் வளாகத்திற்குள் கடைகள் வைக்க அனுமதி மறுக்க வேண்டும் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதையேற்று தமிழக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், கோவில் வளாகத்திற்குள் கடைகள் வைக்கக்கூடாது என்று அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கோவில் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த குமார் என்பவர் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீட்டு செய்தார்.

இதை விசாரித்து வந்த உச்சநீதி மனற்ம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது கோவில் வளாகத்திற்குள்  கடைகள் வைக்கக்கூடாது என்று  கடந்த  ஆண்டு ஜன.12ந்தேதி  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து செய்து உத்தரவிட்டது.