சென்னை:

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு  என்று அறிவித்துள்ளது தமிழக அரசு .

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற 19-ஆம்  தேதி நள்ளிரவு  12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி.  காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .  டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளை மதியம் 2 மணி வரை திறக்கப்படும் நிலையில், முழு ஊரடங்கு என்பது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியாகதாகவும் உள்ளது.