கடைகள் இன்று மட்டும் மாலை வரை திறந்திருக்க வேண்டும்: முக ஸ்டாலின்

சென்னை

நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்று கடைகளை மாலை வரை திறந்திருக்க வேண்டும் என அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி தமிழக ரசு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை முதல் புதன்கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

அதையொட்டி இன்று காலை முதல் அனைத்து மளிகை மற்றும் காய்கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.   ஒரு சில இடங்களில் ஊரடங்கு விதிகளையும் மீறி மக்கள் இடைவெளி விடாமல் வரிசையில் நிற்கின்றனர்.  இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டரில்,

”பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. 

நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.”

என பதிந்துள்ளார்.