சந்திரபாரதி:
 
henandchicken
கோழிப் பஞ்சாரமொன்றில் கோழி முட்டைகள் அடைகாக்க வைக்கப்பட்டிருந்தன. அவ் வீட்டின் சிறுவன் மரக் கூட்டிலிருந்த வேறொரு பறைவையின் முட்டையையும் அடைகாக்க வைக்கப்பட்டிருந்த முட்டைகளோடு கலந்து வைத்து விட்டான்.
இதனை அறியாத கோழியும் அடைகாத்து வந்தது. குஞ்சு பொறிக்கும் காலமும் வந்தது. முட்டைகளெல்லாம் பொறிந்து கோழிக் குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றோடே கூட அந்தப் பறவை முட்டையும் பொறிந்து குஞ்சு வெளி வந்தது. தாய் கோழி எல்லா குஞ்சுகளையும் சமமாகவே பாவித்து பேணி வந்தது.
குஞ்சுகள் வளர்ந்து வரும் போது அந்த பறவைக் குஞ்சு மற்ற கோழிக் குஞ்சுகளை விட வித்தியாசமாக இருந்தது. கோழியினத்தைச் சேர்ந்தது போலில்லை. இருப்பினும், அந்த பறவையும் கோழிகளோடே வளர்ந்து வந்தது.
ஒரு நாள், வானில் ஒரு பருந்து பறந்து கொண்டிருந்தது, உடனே தாய்க் கோழி எல்லா குஞ்சுகளையும் தன் இறகுகுகளுக்குள் பத்திரமாக பாதுகாத்தது. பருந்துகளிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என குஞ்சுகளுக்கு அறிவுரை கூறியது.
காலம் கடந்தது, கோழிக் குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகின. நமது பறவை உருவத்தில் கோழியைப் போலில்லாமல் இருந்தாலும் கோழிகளில் வித்தியாசமான ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டது.
மீண்டும் ஒரு நாள் ஒரு பேருந்து பறப்பதை வளர்ந்து வரும் கோழிகள் பார்த்தன. நமது பறவையும் தான். தாயின் அறிவுரையை நினைவில் கொண்டு பதுங்கின. அப்போது நமது, பறவை கேட்டது, “ நாமும் பறவை இனம் தானே, நம்மால் இப்படி உயரப் பறக்க முடியாதா”. உடன் இருந்த தோழி கோழி சொன்னது, அந்தப் பறவையின் பெயர் பருந்து, இது பறவைகளின் ராஜா, அவர்களைப் போல் நம்மால் பறக்க முடியாது”.
 
eagle-in-mirror
 
இதனை நம்பி ஏற்றுக் கொண்ட நமது பறவை வழக்கமான வாழ்க்கையையே நடத்தி வந்தது. ஒவ்வொரு முறை பருந்தை வானில் பார்க்கும் போதும் அதற்கு ஒரு ஏக்கம் தோன்றும். கோழிகள் வானில் பறக்க முடியாது என நம்பிய நமது பறவை, ஒரு முறை கூட பறக்க எத்தனித்து முயற்சி எடுக்கவேயில்லை.
ஒரு நாள் எல்லா கோழிகளையும் போல நமது பறவையும் கறிக் கோழியாகியது. பாவம் அதற்குத் தெரியவில்லை அது பறவைகளின் ராஜ இனத்தைச் சேர்ந்த பருந்து என்பதும், விண்ணில் பறக்க இயலும் என்பதும்.
இது போலத் தான் நம்மில் பலரும். தவறான கூட்டில் பொறிக்கப்பட்டு, பொருந்தாத சூழலில் வளர்க்கப்பட்டு இறுதி வரை நம் சுயமறியாமல் வாழ்ந்து மறித்தும் போகிறோம்…
 
இரண்டு படங்களை அனுப்பி வைக்கிறேன்