ற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு கடைசி கட்டமாகவே  இன்சுலின் ஊசி வழியாக மருந்து கொடுக்கப்பட்டு நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் தற்போதைய மெட்ராஸ் நீரிழிவு ஆய்வு அறக்கட்டளையானது ஆரம்பக்கட்டத்திலயே இன்சுலின் கொடுக்கும்போது நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டாமல்லாமல் கணையத்திற்கும் நன்மை செய்வதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த இரண்டு வருடமாக செய்யப்பட்ட ஆய்வு முடிவினை, நீரிழிவு நோய்கான ஆய்விதலான Journal of Diabetology ல் வெளியிடப்பட்டுள்ளது

அதில், மூன்று மாதங்களுக்குள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அதே சமயம் வேறு பெரிய நோய்கள் ஏதும் இல்லாத 426 நோயாளிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்,

நீரிழிவு நோய்க்கு ஆரம்பத்திலயே இன்சுலின்  ஊசி வழியாக கொடுத்தால்நோயை கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை நாங்கள் முன்பே அறிந்திந்தாலும்,  இந்த  ஆய்வு முடிவுகள் அதை மீண்டும் வலியுறுத்தியுள்ளன, ”என்று மெட்ராஸ் நீரிழிவு ஆய்வு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி மோகன் கூறினார்.

“இரத்தச் சர்க்கரை அளவைப் கவனமாக பேணுகையில், சிலரை மருந்துகளில் இருந்து விடுவிக்க வும, குறைவான  மருந்துகளையே பயன்படுத்துவதையும் எங்கள் ஆய்வில் கண்டறி முடிந்ததும் ” என்றும் அவர் கூறினார்.

ஆய்வுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்து அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு சர்க்கரை அளவு சீராகும் வரை நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் சுமார் 0.2 யூனிட் இன்சுலின் டோஸ் வழங்கப்பட்டது.

மெட்ஃபோர்மின் போன்ற வாய்வழி மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

HbA1C நிலை 10.5% ஐ விட அதிகமாக இருந்தால் இன்சுலின் அளவு அதிகரிக்கப்பட்டது. HbA1c என்பது  மூன்று மாதங்களுக்கு மேல் இரத்தச் சர்க்கரையின் சராசரி அளவை வழங்குகிறது.

HbA1c 5.7% க்கும் குறைவாக இருந்தால், நபர் சாதாரணமாகக் அதாவது நீரிழிவு நோயற்றவராக கருதப்படுகிறார்;  அதற்கு மேல் HbA1c அளவு 6.5% நீரிழிவு இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகப்பொருள்.

“பெரும்பாலான நோயாளிகளில் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைத்தது. HbA1c நிலை 11.8% முதல் 6.8% வரை குறைந்தது, ” என்றும் டாக்டர் மோகன் கூறினார்.

10 வாரங்களின் முடிவில், 58% பேர் HbA1c அளவை 7.0% க்கும் குறைவாகக் கொண்டிருந்தனர், அதே நேரத்தில் 12.7% தனிநபர்கள் 5.6% க்கும் குறைவாக இருந்தது.

ஒரே ஒரு நோயாளி இன்சுலின் தொடர வேண்டியிருந்தது, சுமார் 3% நோயாளிகள் குறைந்தது ஒரு வருடத்திற்கு அனைத்து மருந்துகளிலிருந்தும் வெளியேறினர், அவர்களில் கிட்டத்தட்ட கால் பங்கிற்கு ஒரே ஒரு மருந்து/மாத்திரை சிகிச்சை தேவைப்பட்டது.

அவர்களில் 50% பேர் இரட்டை மருந்து சிகிச்சையை பரிந்துரைத்தனர், மேலும் 23% பேர் HbA1c அளவை 7.0% க்கும் குறைவாக பராமரிக்க மூன்று மருந்து சிகிச்சை தேவை.

“கணையத்தின் ஆரோக்கியம் மேம்பட்டதுதான் சிறந்த விளைவு” என்று நீரிழிவு மருத்துவர் டாக்டர் அஞ்சனா ரஞ்சித் மோகன் கூறினார். “இன்சுலின் ஊசி நிறுத்தப்பட்ட பின்னர் இந்த விளைவு இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது. ஐந்து நோயாளிகளில் ஒருவருக்கு இது கிட்டத்தட்ட சாதாரணமானது ”என்றும் அஞ்சனா ரஞ்சித் மோகன் கூறினார்.

நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிப்பதற்கான குறுகிய கால இன்சுலின் சிகிச்சையை  மாற்ற வேண்டுமா என்பதை பெரிய ஆய்வுகள் தீர்மானிக்க முடியும்.  என்றாலும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஏற்கனவே அதை நிரூபித்துள்ளன, ஆனால் நாங்கள் இதை இந்திய அளவில் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை கொடுக்கப்படவேண்டும் ” என்று டாக்டர் மோகன் கூறினார்.

-செல்வமுரளி