சென்னை,

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு  தேவையான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று அனைத்து கட்சிகளும் குறைகூறி உள்ளது.

அதைத்தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாதது தெரிய வந்தது.

அதையடுத்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து இன்று (13-ந்தேதி) அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

அதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு திமுக மாநிலங்களவை எம்.பி.யான கனிமொழி தலைமையில் போராட்டம்  நடைபெற்றது.

சென்னை, சிந்தாரிப்பேட்டை பகுதியில்  ஜெ.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டையில் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி கருமண்டபம் திருநகர் ரேஷன்கடை வாசலில் முன்னாள் அமைச்சர் நேர தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் ஏ.வ.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

தமிழகம் முழுவதும் 20,000 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.