சென்னை:

ண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியவர், முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா வலியுறுத்தினார்.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றானது அண்ணா பல்கலைக்கழகம். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது தற்பேதாத பரந்து விரிந்துள்ளது.

இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டது.  சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமெனில் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பாதிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமான மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்று  தமிழக அரசு தெரிவித்தது.  அவ்வாறு உறுதி அளித்தால் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி 5 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று அரசாணை வெளியிட்டது.

இதையடுத்து,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை தங்க மணி, சட்டத்துறை அமைச்சர் ச.வி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லதுதான் என்றவர், இதனால்,  இணைப்பு கல்லூரிகளை நிதி ரீதியாகக் கண்காணிக்க ஏதுவாக அமையும் என்றார்.

ஆனால், அதனைச் செய்வதற்கு முன்னர் முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின், இந்த முடிவு வரவேற்கத் தக்கது என்று கூறியவர், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் அதில் ஏற்படும் நிதி நெருக்கடிக்குத் தமிழக அரசு உதவும் என்று நம்புவதாகவும் கூறினார்