தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்து வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் :-

“நடுத்தர வர்க்கக் குடும்பங்களை சினிமா ஏன் அழகியலுடன் காட்ட முயல்கிறது. நமது படங்களில் அனைத்துக் கதாபாத்திரங்களும் போதுமான பணவசதி கொண்டவர்களாகவும், அவர்களுடைய இடங்கள் அழகானதாகவும் காட்டப்படுகின்ற. ஏன் நடுத்தர வர்க்கத்தை அதன் உண்மைத்தன்மையுடன் காட்ட நாம் மிகவும் பயப்படுகிறோம்? ஹாலில் இருக்கும் அலமாரியில் பிரகாசமான பொம்மைகள் ஏன் காட்டப்படுவதில்லை?

பல்லாண்டு தூசி படிந்த சில வெற்றிக் கோப்பைகளைக் காட்டுவதில்லையே. ஜப்பானின் தொங்கும் தோட்டத்தின் படத்தைப் பின்னணியில் கொண்ட குடும்பப் புகைப்படங்கள், தூக்கி எறிய முடியாத ஆடம்பரமான அழைப்பிதழ், காலம் முடிந்து போன மரச்சாமான் போன்றவற்றையே காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையான பொருட்களைக் காட்டுங்கள் நண்பா. உண்மைத்தன்மையை உங்களால் வடிவமைக்க முடியாது” என பதிவிட்டுள்ளார் .

இந்தப் பதிவைத் தொடர்ந்து அடுத்ததாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், “என்னுடைய முந்தைய பதிவில் நான் மலையாள படங்களைக் குறிப்பிடவில்லை. மலையாள சினிமா அனைத்தையும் சரியாகச் செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.