தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது புதிய படம் குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஷ்ரத்தா. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு என்கிற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா.

இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் இப்படம் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.