அமலாபால் நடித்த துணிச்சலான பாத்திரத்தில் நடிக்கிறார் இந்தி நடிகை..

டிகை அமலா பால் நடித்த படம் ஆடை. ரத்ன குமார் இயக்கி இருந்தார். டைட்டில்தான் ஆடை ஆனால் அமலாபால் ஆடையே இல்லாமல் நடித்ததுதான் படத்தின் ஹைலைட். இப்படம் வந்தபோது அமலா பாலுக்கு துணிச்சலான நடிகை என்று ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும் பலர் அவர் ஆடை இல்லாமல் நடித்ததை கடுமையாக விமர்சித்தனர்.


படத்தின் கதை முழுவதும் அமலாபால் கதாபாத் திரத்தை சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அமலா பால் ஏற்று நடித்த பாத்திரத்தை ஷ்ரத்தா கபூர் ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷ்ரத்தா கபூர் இந்தியில் இளம் நடிகையாக தனகென ஒரு இடத்தை பிடித்திருப்பதுடன் அதிக ரசிகர்கள் வட்டத்தையும் பெற்றிருக்கிறார். அவரது ரசிகர்கள் ஆடையில்லாமல் ஷ்ரத்தா நடிக்க உள்ளதை எப்படி ஏற்பார்கள் என்று தெரியவில்லை.


ஷ்ரத்தா ஏற்கனவே தமிழ், தெலுங்கில் உருவான சாஹோ என்ற படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.