தான் கர்ப்பமாக உள்ள விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் பாடகி ஸ்ரேயா கோஷல்….!

பிரபல பின்ணணி பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக உள்ள விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் .

அவர் கருவுற்றிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

நீலம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த ஆடையை அணிந்திருந்த அவர், வயிற்றை தனது கைகளால் பற்றிக்கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

“குழந்தை #Shreyaditya (ஸ்ரேயாதித்யா) இஸ் ஆன் இட்ஸ் வே! இந்த செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஷிலாதித்யாவும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால் உங்கள் எல்லா அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு தேவை, ”என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார் .