தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இரு இடங்களிலும் அவருக்கு வாய்ப்பு குறைந்ததால், அம்மா வேடங்களிலும் நடிக்க முடிவு செய்தவருக்கு அப்போதும் சரியான வாய்ப்பு அமையவில்லை.

இந்நிலையில் ரஷ்ய நாட்டு காதலரை திடீர் திருமணம் செய்துக்கொண்டு ரஷ்யாவிலேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. விமல் ஹீரோவாக நடிக்கும் ‘சண்டைக்காரி’ என்ற படத்தில் ஸ்ரேயா தான் ஹீரோயின். ஆர்.மாதேஷ் இயக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.