ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் ஸ்ரியா சரண்…..!

‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக RRR ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெற்றது .

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் 2021 ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜய் தேவ்கன் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரியா சரண் தேர்வாகியுள்ளார். இன்ஸ்டகிராம் உரையாடலில் ஒன்றில் இத்தகவலை ஸ்ரியா சரண் தெரிவித்துள்ளார். பிளாஷ்பேக் கதையில் நான் வருவேன். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று கூறிய ஸ்ரியா சரண், ஊரடங்கு காரணமாக ஸ்பெயினில் தற்போது உள்ளதாகவும் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு தொடங்கியவுடன் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.