டெல்லி: இசை மற்றும் மொழியியல் கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு  குடியரசு தலைவர், பிரதமர் மோடி  முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி, எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  ஸ்ரீபாலசுப்பிரமண்யம் இந்தியாவின் வளமான இசை மற்றும் மொழியியல் கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளமாகும்,  அவர் உண்மையில் பாதம் நிலா – பாடும் சந்திரன்- நம் நாட்டின் மீது தனது சிறப்பு பிரகாசத்தை சிந்தியவர்  என்று கூறியுள்ளார்.