இணையத்தில் வைரலாகும் சிவ பக்தையாக நடிகை ஸ்ரீரெட்டியின் வீடியோ…!

சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளிப்பதாகச் சொல்லி, தன்னை படுக்கைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என பல முன்னணி நடிகர்கள் , இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி

இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் என பலர் எனக்கு வாய்ப்புத் தருவாதச் கூறி தன்னை படுக்கை அறைக்கு அழைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார்.

சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சினிமா பிரபலங்களை வருத்தெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது சிவன் பக்தையாக, ஒரு அகோரி வேடம் இட்டு அவர் நடித்துள்ள பாடல் வீடியோவின் மூலம் தற்போது மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நடிகை ரெட்டி வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.