Random image

பிறந்த நாளில் புகைக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை

ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் புகைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தில் ஸ்ரேயா புகைக்கும் ஒரு காட்சி படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

shrriya

’எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்த படத்தை தொடர்ந்து விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரௌத்திரம் உள்ளிட்ட படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் ஸ்ரேயா நடித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குறைய தொடங்கின. தற்போது அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் திருப்படம் விரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரேயா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் ஸ்ரேயா புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பிடித்துள்ளன.