“குறைந்தது இருபது வருஷம் ஆகும்’’ – சுருதி ஹாசன் சலிப்பு….

 

நடிகர் கமலஹாசனின் மகளும், நடிகையுமான சுருதி ஹாசன், ஊரடங்கு காரணமாக மும்பையிலேயே முடங்கி கிடந்தார். அந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி ’’மியூசிக்’ கற்றுக்கொண்டவர், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “லாபம்’’ தமிழ் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்க விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் கிராமத்து பின்னணியில் போடப்பட்டுள்ள அரங்கில் நடந்து வருகிறது.

’’பெண்களை மதிப்பவர். சமூக அக்கறை கொண்டவர்’’ என இயக்குநர் ஜனநாதனை புகழ்ந்தவரிடம், ‘’ கொரோனா காரணமாக சினிமா உலகம் நசிந்து போய் விட்டது. சினிமாவை காப்பாற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பள குறைப்பு செய்துள்ளார்களே?’’ என கேட்டபோது சலிப்புடன் பதில் சொன்னார், உலக நாயகனின் மகள்.

“கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சிலர் ஊதியத்தை குறைத்து கொள்ளலாம். கதாநாயகிகளுக்கு இங்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை.

ஹீரோக்களுக்கும், கதாநாயகிகளுக்கும், சம்பள வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது. இந்த வித்தியாசம் குறைய இன்னும் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் ஆகும்‘’ என்கிறார், சுருதி.

– பா.பாரதி