ஸ்ருதி தயாரிக்கும் பட்டன் பட்டர்ஃப்ளை முகமூடிகளுக்கு மவுசு..

லகநாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் கடந்த 2 வருடமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். லண்டன் பாய்பிரண்டுடன் ஒரு வருடம் டேட்டிங் செய்தார். பின்னர் அவரிடம் பிரேக் செய்துக் கொண் டார். மீண்டும் நடிக்க முடிவு செயதார். விஜய் சேதுபதி ஜோடியாக ஜெனநாதன் இயக் கத்தில் ’லாபம்’ என்ற படத்தில் நடிக்கி றார். இந்நேரம் படம் முடிந்து திரைக்கு வந்திருக்க வேண்டும் மற்ற படங்களில் விஜய்சேதுபதி பிஸியாக இருந்ததாலும் கொரோனா ஊரடங்காலும் படமும் ஷூட்டிங் இல்லாமல் முடங்கியிருக்கிறது,

 


லாக்டவுனில் மும்பை வீட்டில் வசிக்கும் ஸ்ருதி பொழுதுபோக்கிற்காக பல பணிகளை வீட்டுக்குள்ளேயே செய்து வருகிறார். யோகா பயிற்சி, பாடல், இசை பயிற்சி செய்யும் அவர் தற்போது மாஸ்க் டிசைனராக மாறி இருக்கிறார். அவர் இன்று இன்ஸ்டா கிராமில் டிசைனர் மாஸ்க் இருந்தபடி யிருக்கும் படத்தை வெளியிட்டிருக் கிறார். பட்டாம்பூச்சிகள் பறந்து வந்து அவரது மாஸ்க்கில் ஒட்டிக் கொண்டது போல் இருக்கும் அந்த மாஸ்க்கை அவரை தயாரித்தது என்பதுதான் இதில் ஸ்பெஷல். கறுப்பு மாஸ்க்கில் டெய் பிரிண்ட் செய்தும் பட்டன் எம்பிராய்டரி செய்தும் அசத்தியிருக்கிறார்.
“என் முகமூடிக்கு தேவை என்பதால் இந்த டெக்ரேஷன் ’ என அவர் தெரிவித் திருப்பதுடன் கண்டிப்பாக மாஸ்க் அணியுங்கள், வித்தியாசமாக அணியுங் கள், நான் முயற்சித்தேன் மீண்டும் முயற்சி தொடரும்’ என கூறி உள்ளார்.