நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் தான் இருக்கிறார். தான் ஒரு வீட்டிலும், தங்கை அக்ஷரா ஹாசன் ஒரு வீட்டிலும், அப்பா கமல்ஹாசன் ஒரு வீட்டிலும் என இருக்கின்றனர்.
லாக்டவுன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி தற்போது பேட்டி அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
https://www.instagram.com/p/CAUxi6lhyxS/
“காலையில் எழுந்ததும் பல் தேத்து படுக்கையை சரி செய்து , நன்றாக உடை அணிவேன். என்னை பொறுத்தவரை quarantine என்பது எதற்காக என்றால், நம்மை நாமே காதலிக்க துவங்கத்தான் என கூறுவேன். எனக்கு தேவையானதை நானே செய்து கொள்வது என்னை நன்றாக உணர வைக்கிறது.”
“சமைப்பது , வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதிலும் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.
மேலும் இந்த கொரோனா லாக்டவுனில் தான் ஒரு விஷயத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி. அது என்னவென்றால் தனிமையில் இருப்பதும் நல்லா தான் இருக்கு . தனிமையில் இருப்பதையும் நான் என்ஜாய் செய்கிறேன். நானே எனக்கு சிறந்த கம்பெனி.
“இப்போது இருக்கும் சூழ்நிலையில் எதுவும் நம் கையில் இல்லை. நம்மால் எதையும் செய்ய முடியாது. உலகத்தின் பல இடங்களில் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனாலும் நார்மல் என்பது நாம் முன்பு இருந்தது போலவே இருக்காது” என ஸ்ருதி கூறியுள்ளார்.