தமன்னாவை மணம் புரிய விரும்பும் ஸ்ருதி ஹாசன்

சென்னை

தாம் ஆணாக பிறந்திருந்தால் நடிகை தமன்னாவை மணம் புரிந்திருப்ப்பேன் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை தமன்னா. அதன் பிறகு இவர் நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஆனார். தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இவர் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் தமன்னா புகழ் பெற்ற நடிகை ஆவார்.

கமலஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கடந்த இரு வருடங்களாக எந்த பட்த்திலும்நடிக்கவில்லை. அவர் தனது இசை ஆல்பங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போதய இளம் நடிகர்கள் அனைவருடனும் ஸ்ருதி நடித்துள்ளார். சமீபத்தில் ஸ்ருதி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன், “நடிகைகளில் எனக்கு தெரிந்து மிகவும் அழகானவ்ர் தமன்னா. இவருடன் நட்பில் உள்ள யாரும் இவர் நட்பை இழக்க விரும்ப மாட்டார்கள். ஒரு வேளை நான் ஆணாக பிறந்திருந்தால் தமன்னாவுடன் டேட்டிங் சென்றிருப்பேன். அவ்வளவு ஏன் ? எதிர்ப்புகள் வந்தாலும் அதை மீறி அவரை மணம் புரிந்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

You may have missed