டில்லி

இந்திய விமானப்படையின் முதல் பெண் தளபதியாக ஷாலிஜா தாமி பொறுப்பு ஏற்றுள்ளார்.

ஹிண்டன் விமான தளம் இந்திய விமானப்படையில் கீழ் அமைந்துள்ளது.  இது ஆசியாவின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும். இந்த தளத்தின் சேதக் ஹெலிகாப்டர் பிரிவு பயணம், விபத்தில் உள்ளோரை மீட்பது, அவசர மருத்துவச் சேவை உள்ளிட பணிகளைச் செய்து வருகிறது.

இந்த பிரிவில் விங் கமாண்டராக ஷாலிஜா தாமி பணி புரிந்து வந்தார்.  தற்போது ஷாலிஜா தாமி முதலாம் விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்னும் பெருமையை இவர் பெறுகிறார். இந்த பதவி இந்த பகுதியின் உயர் அதிகாரிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஷாலிஜா தாமி கடண்டஹ் 15 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் பணி புரிந்து வருகிறார். இவர் இந்திய விமானப்படையின் முதல் பெண் பயிற்றுவிப்பாளர் என்னும் பெருமையையும் ஏற்கனவே பெற்றுள்ளார்.