இறப்பதற்கு முன்பு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்த ஷுஜத் புஹாரி


கடந்த வாரம் ஸ்ரீநகரில் கொலை செய்யப்பட்ட காஷ்மீரை சேர்ந்த பத்திரிக்கையாளர் தனக்கு பாதுகாப்பு கேட்டு முதலமைச்சரை அணுகியதாக தகவல் கிடைத்துள்ளன. காஷ்மீரை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஷுஜாத் புஹாரி ஜூன் 4ம் தேதி ஸ்ரீநகரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். ”ரைசிங் காஷ்மீர்” என்ற பத்திரிக்கையின் தலைமை ஆசிரியராக புஹாரி செயல்பட்டு வந்தார். ஸ்ரீநகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது தீவிரவாதிகளால் புகாரி சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் அவரின் பாதுகாவலர்கள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
bhuhari
இந்நிலையில் புஹாரி கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தியை சந்தித்து பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தார் என புலனாய்வு பிரிவின் முன்னாள் சிறப்பு இயக்குனர் ஏ.எஸ்.துலத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் லண்டன் சென்ற புஹாரி வன்முறையில் ஈடுபடுவோறுக்கு வெளிப்படையான எச்சரிகையை விடுத்திருந்தார் என்றும் ஏ.எஸ்.துலத் குறிப்பிட்டார்.

”புஹாரியை ஆறு வாரங்களுக்கு முன்னர் இஸ்தான்புல்லில் சந்தித்தேன். அவர் பாக்கிஸ்தானிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார் . மே மாதம் 23ம் தேதி நான் எழுதிய “தி ஸ்பை க்ரோனிக்ல்ஸ்” என்ற புத்தகத்தின் துவக்க விழாவில் புஹாரி பங்கேற்றார். அப்போது அவர் மிகவும் விரும்பு காஷ்மீர் குறித்து பயமில்லாமல் பேசினார்” என்று முன்னாள் உளவுத்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

புஹாரியின் பேச்சு அங்குள்ள மக்களின் வாக்குகளை பெறும் விதத்தில் இருந்து வந்தது. நல்ல நண்பரையும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு கிடைத்த மிக சிறந்த பத்திரிக்கையாளரையும் இழந்து விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.