காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி : காஞ்சியில் பரபரப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயன்றுள்ளார்.

 

மூர்த்தி என்பவர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் உதவு ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் பணியில் இருக்கும் போதே மது அருந்தி விட்டு மூர்த்தி பல இடங்களில் தகராறு செய்துள்ளார். அதை ஒட்டி அவர் மீது பல புகார்கள் எழுந்துள்ளன.

இந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகரிகள் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். இந்த தகவலை அறிந்ததும் மூர்த்தி மிகவும் அச்சம் அடைந்துள்ளார். நேற்று இரவு பணியில் இருக்கும் போது அவ்ர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பூச்சி மருந்தை சாப்பிட்ட மூர்த்தி வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை சக காவலர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் சென்னை மருத்துவமனைக்கு மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காஞ்சிபுரம் காவல்துறியினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்திலேயே ஒரு உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றது காஞ்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.