போலி விளம்பரம் கண்டு யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என எச்சரிக்கும் சிபி சத்யராஜ்…!

பிரபல நடிகர்கள், இயக்குநர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் படத்திற்கு ஹீரோயின் தேவை, துணை நடிகைகள் தேவை என்று சமூக வலைதளங்களில் போலியான விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிபி சத்யராஜின் புகைப்படத்தை போட்டு அவரின் படத்திற்கு 18 முதல் 28 வயது வரையிலான ஹீரோயின், தோழிகள், துணை நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு பெண்கள் தேவை என போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிபி அந்த போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு : இந்த புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வலம் வருவது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பொய்யான தகவல். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தயவு செய்து ஏமாந்துவிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.