சிபிராஜ் நடித்த ‘போலீஸ் அவுர் டைகர்’ படத்துக்கு அதிக பட்ச டிவி பார்வை..

சிபிராஜ் நடித்த படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. சத்யராஜின் சொந்தப் பட நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்தது. சிபிக்கு திருப்பு முனையாகவும். வர்த்தக ரீதியில் வசூல் பெற்ற படமாகவும் அமைந்தது.


‘போலீஸ் அவுர் டைகர்’ என்ற பெயரில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த வாரம் B4U கோடாக் சேனலில் ஒளிபரப்பான போது 2099000 பார்வையாளர்களைப் பெற்றது. இது 2.09கோடி பேர் இப்படத்தைப் பார்த்ததற்கு சமம்.
சிபி ராஜின் மற்றொரு வெற்றிப் படமான ‘சத்யா’ யூ ட்யூபில் வெளியிடப்பட்ட பின் கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சிபிராஜ் மற்றும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இணைந்த முதல் படமான ‘நாணயம்’ பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இணைந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படமும் வெற்றிக் கொடி நாட்டியது என்பது குறிபிடத்தக்கது.