பெங்களூரு

டியூரப்பா ரௌடித்தனத்தை கட்டவிழ்த்து விடும் வகையில் அபாயகரமாக பேசுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பிரசாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   பாஜக தனது பிரசாரத்தில் தெரிவித்து வரும் பல புகார்களுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி அளித்து வருகிறது.   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  பாஜக தேசியத் தலைவர் ராகுல் காந்தி  ஆகியோரி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரதமர் மோடி கடந்த கோவா தேர்தல் பிரசாரத்தின் போது சோனியா மகாதாயி நதியை கர்நாடகத்துக்கு வர விட மாட்டோம் என கூறியதாக தெரிவித்தார்.   அதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் சித்தராமையா, “மகாதாயி விவகாரம் குறித்து முடிவு எடுக்க வேண்டியவர் சோனியா அல்ல.   அதனால் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை.   முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள பிரதமர் வேண்டுமானால் அப்படி கூறி இருக்கலாம்” எனக் கூறினார்.

பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களின் கை மற்றும் கால்களைக் கட்டி தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார்.  அதற்கு சித்தராமையா, “இதன் மூலம் எடியூரப்பா ரௌடித்தனத்தை கட்டவிழ்க்கும் வகையில் பேசி வருவது புலனாகிறது.   அவர் இது போன்ற தனது அபாயகரமான பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.