கர்னாடகா : உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் தொடக்கம்

தும்கூரு, கர்னாடகா

ர்னாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கர்னாடகா முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

உலகெங்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி இப்போது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.   இந்தியா போன்ற வருடம் முழுவதும் வெய்யில் உள்ள நாட்டுக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.    காற்றாலை மின்சார உற்பத்தி அதிக அளவில் இயங்கினாலும்,  வருடம் முழுவதும் காற்றடிக்கும் பருவம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்னாடகா மாநிலம் தும்கூரு பகுதியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அரசு அமைத்துள்ளது.   சக்தி ஸ்தலா என பெயரிடப்பட்டுள்ள இந்நிலையம் 13000 ஏக்கர் பரப்பளவில் 2000 மெகாவாட் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.   ரூ, 16500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் ஆகும்.   இந்த நிலையத்தை அரசுடன் சேர்ந்து சோலார் எனர்ஜி கார்பொரேஷன் ஆஃப் இந்தியா அமைத்துள்ளது.

இந்த நிலையத்தை இன்று கர்னாடகா மாநில முதல்வர் சித்தராமையா திறந்து வைத்துள்ளார்.   இது குறித்து சித்தராமையா, “கர்னாடகா மாநிலம் இதுபோன்ற மின்நிலையங்கள் அமைப்பதில் நாட்டின் மூன்றாம் இடத்தில் உள்ளது.  இதனால் கர்னாடகா மின்மிகை மாநிலமாக உள்ளது.   நாட்டின் மின் தேவையில் இது போன்ற மின்நிலையங்கள் மூலம் 20% வரை பெறும் முயற்சியில் மாநிலம் இறங்கி உள்ளது.   இந்த நிலையத்தின் அமைப்பு நிலம் கைப்பற்றுவது உட்பட அனைத்தும் சேர்ந்து 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அதானி குழுமத்தினால் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் கமுதியில் உள்ள சூரிய மின்சக்தி நிலையமே உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமாக இருந்தது.  இந்நிறுவனம் ரூ,4560 கோடி செலவில் 648 மெகாவாட் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Siddaramiah inaugurating Worlds largest solar power plant
-=-