சித்த வைத்தியர் சுப்ரமணியன் மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : அரசு தகவல்

துரை

கொரோனா சிகிச்சைக்காக சித்த வைத்தியர் சுப்ரமணியன் தயாரித்த இம்ப்ரோ மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு என இதுவரை தனி மருந்து மற்றும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

சித்த வைத்தியர் சுப்ரமணியன் என்பவர் 66 மூலிகைகளைக் கொண்டு இம்ப்ரோ என்னும் ஒரு மருந்து தயாரித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார்.

இதற்குத் தமிழக அரசு அளித்த பதிலில் இம்ப்ரோ மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த கட்ட ஆய்வுக்கு இந்த மருந்தை அனுப்பி வைக்க உள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி