சென்ற பகுதியில் ஆங்கில மருத்துவத்தில் எவ்வாறு கரிசலாங்கண்ணி பயன்படுகிறது என்று பார்த்தோம். இவ்வாரம் கரிசாலையை எப்படி உண்பது ? எந்த நோய்க்கு எவ்வளவு உண்பது, மருந்தின் அளவு முறையை பார்ப்போம்

சித்த மருத்துவம்

சித்தர் பாடல் 1

பொற்றலைக்கை யாந்தகரை பொன்னிறமாகக் கும்முடலை…
— அகத்தியர் குணபாடம்,
கண்ணிற்கு ஒளியையும் , உடலை பொன் போன்று மின்னவும் செய்யும்

சித்தர் பாடல் 2

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை

யுறற்பாண்டு பன்னோ யொழிய- நிரச்சொன்ன

மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்து

கையாற் தகரையொத்தக் கால்

-அகத்தியர் குணபாடம்

சித்த மருத்துவப் பயன்கள்
பாண்டு, இரத்தசோகை, காமாலை, பித்த நீர் நோய், தோல் நோய்கள், மலச்சிக்கல், முடி உதிர்தல், கண் பார்வை கோளாறு, தொண்டை கம்மல், குஷ்டம் , புண் வீக்கம் ஆகியவை குணமாகும் தலை முடி அடத்தியாக வளர கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு, குமரிச்சாறு(சோற்றுக்கற்றாழை), ஜாதிக்காய்  , பசுவின் பால், இவை அனைத்தும் ஒன்றாக அரைத்து , காய்ச்சி வடித்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி, செவி நோய் , Sinusitis எனப்படும், கண் நோய் வராமல் பாதுகாக்கும்

இதன் சாற்றை புண்கள் மீது தடவி வந்தால் புண் வீக்கம் குணமடையும், இதன் இலையை தீயில் சுட்டு சோற்றுக் கற்றாழையுடன் சேர்த்து ஆமணக்கு எண்ணெயில் மை போல செய்து கண் மை போல் இட்டு வந்தால் கண் அழகு பெறும், அதோடு கண் குளிர்ச்சியாகும்

நோய்களுக்கு ஏற்றவாறு உண்ணும் முறை

1.வயிற்றுப்புண் ( Gastritis) உள்ளவர்கள்  இந்தச்சாற்றை பாலுடன் கலந்து 5 மிலி மூன்று வேளையும் உணவுக்கு முன் தொடர்ந்து 15 நாள் சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும்

2.முடி உதிர்வை தடுக்க : தினமும் இரண்டு வேளை 5 மிலி வீதம் பாலில் கலந்து தொடர்ந்து மூன்றுமாதங்கள் குடித்துவர  முடி உதிர்வு நிற்கும். இள நரை மறையும், முடி அடர்த்திஆகும்

3.ஆஸ்துமா
கரிசலாங்கண்ணியை பஸ்பமாக்கி தொடர்ந்து தினமும் 2 கிராம்  வீதம் மூன்று மாதங்கள் பாலில் உண்டுவர நல்ல பலன் தெரியும்

4.உடல்வலி
எப்போதெல்லாம் உடல் வலி இருக்கிறதோ அப்போதெல்லாம் கரிசலாங்கண்ணி சாற்றை 5 மிலி வீதம் குடித்துவந்தால் உடல் வலி குறையும்
5.பாம்பு கடி, தேள் கடி
பாம்பு கடிக்கும், தேள் கடிக்கும் மருந்தாக  கரிசாலை சாற்றை 5 மிலி வீதம்  ஒரு வாரம் உண்டு வந்தால் விஷ முறிவு ஏற்படும்.
6.மஞ்சள் காமாலை உள்ளவர்கள்  இந்த இலையை மிளகுடன் கூட்டி சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும் கரிசாலை சாற்றை 5 மிலி வீதம் மோரில் கலந்து இரண்டு வேலை 48நாட்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலப்படும். கல்லீரலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும்,  மண்ணீரல் வீக்கமும் குறையும்
7. தலை சொட்டை மற்றும் தலை முடி உதிர்தல்
கரிசாலை சாற்றை நல்லெண்ணெயுடன் காய்ச்சி தலையில் தடவி வந்தால் தலை சொட்டை விழாது. முடி உதிர்தலை தடுக்கும். இள நரையையும் தடுக்கும். முடி அடர்த்தியாக வளர உதவும்
8. leucoderma. எனப்படும் வெண்புள்ளி நோய்க்கு கரிசாலை சாற்றை மூன்று மாதங்கள் தடவி வர நல்ல பலன் தெரியும், தோலின் நிறம் மாறும்.
9.நம் நாட்டுக்கு அருகில் உள்ள வங்காளதேசத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக
கரிசாலை இலை, அருகம்புல் சேர்த்து சேர்த்து கொதிக்கவைத்து நீரை துணி மூலம் வடிக்கட்டி பின் அந்நீரை தொடர்ந்து அருந்திவந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்
என்கின்றனர்
10.வெள்ளை கரிசலாங்கண்ணியை கொண்டு பல் ஈறுகளின் மீது தேய்த்து கொப்பளித்து வந்தால் ஈறுகள் பலப்படும். நாக்கு , தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது
11. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கரிசலாங்கண்ணியை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் தொடர்ந்து அருந்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
12.சிறுநீர தொற்று, முகச்சுருக்கம்,  பசியின்மை, மலச்சிக்கல், பேதி என பல நோய்களுக்கு மருந்தாகவும் கரிசாலை விளங்குகிறது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மாதவிடாய் கோளாறுகள் னவே உங்கள் உணவில் நாள்தோறும் இக்கீரையையும் சேர்த்து உணவாகவோ அல்லது 5 மிலி சாறாகவோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்
நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்

அருகில் உள்ள அரசு சித்த மருத்துவ மையங்களில் சித்த மருத்துவரை அணுகி கரிசலாங்கண்ணியைப் பயன்படுத்துவதுப்  பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002