ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…!

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்திற்கு இசை சித்துக் குமார், ஒளிப்பதிவு பிரசன்னா எஸ் குமார் மற்றும் சான் லோகேஷ் எடிட்டிங் செய்கின்றனர்.

சித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ள இப்படத்தில் லிஜிமோள் ஜோஸ், தீபா ராமானுஜம், காஷ்மீரா, பிரேம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் , இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது .

கார்ட்டூன் கேலரி