இப்போது அகில இந்திய சமூக ஆர்வலர்களும் சினிமா நட்சத்திரங்களுக்கும் அசை போட கிடைத்த நபர் நம்ம பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் தான். இவர் நடித்த ஒரு விளம்பரத்தை பற்றி தான் இந்தியாவே பேசிக்கொண்டிருக்கின்றது, அதாவது டென்மார்க் நாட்டின் ஒரு விளம்பரத்தில் நடித்தார் அந்த விளம்பரத்தில் இவர் ஒரு பெண்னை தோலில் சுமந்தபடியும் அதை ஒருவர் லிப்டிலிருந்து எட்டி பார்த்து சிரிப்பது போலவும் வடிவமைத்துள்ளனர்.
அந்த படத்தில் ஒரு வாசகமும் உள்ளது அதாவது :- “பின்னால் பிடிக்க வேண்டாம், வேலையை வீட்டில் செய்யுங்கள்” என்ற வசனம் உள்ளதை கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள் உடனடியாக அந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது சில சமூக ஆர்வலர்கள் பல கேள்வியை அந்த விளம்பரத்தின் மீது வைத்துள்ளனர்.
இந்த நிளையில் நடிகர் சித்தார்த் இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு அவர் தனது டுவிட்டரில் பொங்கியது :- “இந்தியாவில் வேலைக்கு போகும் பெண்களை இந்த அளவுக்கு கீழ்த் தரமாக சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் என்ன நினைக்கின்றார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார் சித்தார்த்.
கோலிவுட் வட்டாரத்தில் இதைப் பற்றி யாரும் வாயை திறக்காத நிலையில் சித்தார்த் தான் முதலாக இதைப் பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.