இயக்குநர் அஜய் பூபதியின் ‘மஹா சமுத்திரம்’ படத்தில் சர்வானந்த்துடன் இணையும் சித்தார்த்….!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருபவர் சித்தார்த்.

2013-ம் ஆண்டு தெலுங்கில் ‘ஜபர்தஸ்த்’ படத்தைத் தொடர்ந்து தற்போது நேரடித் தெலுங்கப் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.

‘ஆர்.எக்ஸ்.100’ இயக்குநர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.

ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘மஹா சமுத்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது .

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.