சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள் 

சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள்

எவர் கிரீன் சேலம் முகநூல் குழுவில் ஈசன் டி எழிவ் விழியன் பதிவு

சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள்

மாயம்மா ஜீவசமாதி 🔔

1920 முதல் கன்னியாகுமரி கடற்கரையில் நெடுநாட்கள் வாழ்ந்து வந்த அம்மையார் இவர்,9-2-1992-ல் சேலத்தில் ஜீவசமாதி அடைந்தார்,
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் லா காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

சாந்தானந்த சுவாமிகள் 🔔

1921-ல் பிறந்தவர்,27-5-2002-ல் ஜீவசமாதி அடைந்தார்.
சேலத்திற்கு அருகில் உள்ள உடையார்பட்டி மலைக்குன்று பகுதியிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்தில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் திருவடி பீடத்திற்கு சற்று முன்பாக இவரது ஜீவசமாதி உள்ளது,

கஞ்சமலை சித்தர் 🔔

சேலத்திலிருந்து 21.கி,மீ,தூரத்திலுள்ள கஞ்சமலை அடிவாரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
இவரது ஜீவசமாதி இருக்கும் கோயிலுக்கு அமாவாசைக் கோயில் என்று பெயர்,

அப்பா பைத்தியம் 🔔

கரூர் ஜமின் பரம்பரையில் 1859-ல் சித்திரை புனர்பூசம் நட்சத்திரத்தன்று பிறந்தார்.இவர் தன்னைப் பைத்தியம் என்று கூறிக் கொள்வார்.பக்தர்கள் இவரை அப்பா என்று அழைத்ததினால் இவருக்கு அப்பா பைத்தியம் என்ற பெயர் விளங்கிவிட்டது,இவர் ஜீவசமாதியானது 11-02-2000-ல் தை மாதம் ,அசுவினி நட்சத்திரத்தில்,சேலம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து அரை கி,மீ, தொலைவிலுள்ள திருவாக்கவுண்டனூரில் உள்ள தருக விலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் இவரது ஜீவசமாதி உள்ளது,

பாவை அம்மாள் 🔔

தியாகராசர் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் சேலத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

கரடிச் சித்தர் 🔔

சேலத்திலிருந்து 5.கி,மீ,தூரத்திலுள்ள உத்தம சோழபுரம் கரபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது,  ஔவையார் வழிப்பட்ட கோயில்

சரபங்க முனிவர் 🔔

சேலம் – மேட்டூர் சாலையில் 16.கி,மீ,தொலைவில் உள்ள ஒமலூர் கோட்டையில் வசந்தீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதிக்கு அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,

நிர்வாண சுவாமிகள் 🔔  ( 🌹 வரதர் சுவாமிகள் 🌹 )

சேலம் ஆத்தூரிலிருந்து 5.கி,மீ.தொலைவிலுள்ள தளவாய்பட்டிக்கு வந்து அங்கிருந்து வண்டிப்பாதையில் 3.கி,மீ,தொலைவு நடந்து சென்று அங்குள்ள சாமியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

அப்பண்ண சுவாமிகள் 🔔

சேலம் ஆத்தூரிலிருந்து 15.கி,மீ,தூரத்தில் டவுன் பஸ் மூலம் சென்று வடக்கு மரை கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,

நடேச சுவாமிகள் 🔔

ஆத்தூர் (௮) சின்ன சேலம் வந்து அங்கிருந்து காரியானூர் வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,

ஸ்ரீ காகபுஜண்டர் ரிஷி🔱

சேலம் ஆத்தூரில் இருந்து சின்ன சேலம் செல்லும் சாலையில் அம்மையகரம் என்ற ஊர் உள்ளது இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் தென்பொன்பரப்பி என்ற ஊரில்  ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது