22ந்தேதி சட்டப்பேரவை முற்றுகை: கரும்பு விவசாயிகள் போராட்ட அறிவிப்பு!

மதுரை,

மிழக சட்டப்பேரவையை  வரும் 22-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சர்க்கரை ஆலைகளின் நிலுவைத்தொகை ரூ.1,500 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கேட்டும், அரசு இதுவரை கண்டுகொள்ளாத நிலையில், சட்டமன்றத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த போவதாக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் அறிவித்து உள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி இதை தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழக அரசு மார்ச் மாதம் அறிவித்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயத்திற்கு ரூ.127 கோடி ஒதுக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.1500 கோடியாக இருக்கும் போது தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் ரூ.127 கோடி ஒதுக்கியிருப்பது எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.