ஆடி மாதம் – சில தகவல்கள் – 1

இன்று ஆடி மாதம் பிறந்துள்ளது.   இனி அடுத்தடுத்து பண்டிகைகள் வந்துக் கொண்டிருக்கும்.   இந்நிலையில் ஆடி மாதம் குறித்த தகவல்கள் சிலவற்றை உங்களுக்கு அளிக்க விரும்புகிறோம்.

அந்த தகவல்களில் முதல் ஐந்து தகவல்கள் இதோ :

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

அடுத்த தகவல்கள் நாளை தொடரும்

கார்ட்டூன் கேலரி