ஆடி மாதம் சில தகவல்கள் – 11

ந்துக்களின் புனித மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு கோவிலிலும் விதம் விதமாக திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

நேற்று திருவிழாக்கள் குறித்த சில தகவல்களைப் பார்த்தோம்.

இன்று மேலும் சில தகவல்களை காண்போம்

ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிபெருக்கு என கொண்டாடப்படுகிறது.  காவிரிக்கரையில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களிலும் இது விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கோட்டு திருவிழா மிகவும்  புகழ் பெற்றதாகும் இந்த விழாவின் 10 நாட்களிலும் மீனாட்சி அம்மன் நான்கு வீதிகளிலும் திருவுலா வருவது வழக்கம்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விசேஷ விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.   அதே விழாக்கல் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலிலும் நிகழும்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு மட்டுமின்றி கிராம காவல் தெய்வங்களான மதுரை வீரன்,  கருப்பண்ண சாமிக்கும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.