ஆடி மாதம் சில தகவல்கள் – 12

இந்துக்களின் புனித மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு கோவிலிலும் விதம் விதமாக திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

நேற்று திருவிழாக்கள் குறித்த சில தகவல்களைப் பார்த்தோம்.

இன்று மேலும் சில தகவல்களை காண்போம்

ஆடி மதம் குற்றால அருவியில் நீராடி சிவனை வணங்குவது நோய்களை தீர்க்கும்.   அதுவும் குறிப்பாக மூளைக் கோளாறு உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும் என்பது பக்தர்கள் அனுபவமாகும்.

திருச்சி அருகில் உள்ள திருநெடுங்கா நாத்ர் கொவிலில்  ஆடி மாதம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.   இந்த மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.

சேலத்தில் ஆடி மாதம் வினோதமான திருவிழாவாக செருப்படி திருவிழா நடைபெறுகிறது.   இந்த திருவிழா வேறெங்கும் நடைபெறுவதிலை.   இந்த வேண்டுதலுக்காக பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், மற்றும் முறம் கொண்டு வருவார்கள்.   கோவில் பூசாரி இவைகளால் பக்தர்கள் மீது ஒரு தட்டு தட்டுவார்.   இதற்குப் பெயர் செருப்படி திருவிழா ஆகும்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Significance of Tamil month AADI - 12
-=-