ஆடி மாதம் சில தகவல்கள் – 14

ந்துக்களின் புனித மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு விதமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் கோவில் திருவிழாக்கள் பற்றி தகவல்கள் அளித்து வருகிறோம்.

இன்று மேலும் சில தகவல்களை அளிக்கிறோம்.

முந்தைய காலத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று ஆறுகளிலும் ஆடி மாதத்தில் அதிக நீர்வரத்துடன் காணப்படும்.  எனவே மூன்றாறு பதினெட்டு என கணக்கிட்டு ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வந்தனர்.

இந்த் ஆடி 18 அன்று ஆற்றங்கரையில் உள்ள அனைத்து ஊர்களிலும் அந்த ஊர் சிவன் மற்றும் பெருமாள் ஆற்றங்கரைக்கு எழுந்தருளுவார்கள்.

காவிரி,  கொள்ளிடம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள ஊர்களில் ஆடிப் பெருக்கு விமர்சையாக கொண்டாடப்படும்.