ஆடி மாதம் சில தகவல்கள் – 16

 

இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்

ஏற்கனவே சில கோவில் திருவிழாக்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளோம்.

இன்று மேலும் சில தகவல்களை காண்போம்

தகடூரில் கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.  இங்கு உள்ள சூலின் துர்க்கை அம்மன் சன்னிதியில் முகம் மட்டுமே தரிசனம் அளிக்கப்படுகிறது.   ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் முழு உருவ தரிசனம் காண முடியும்.

தருமபுரம் ஆதின தேவஸ்தான அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி அன்று நவசக்தி அர்ச்சனை செய்யப்படுவது வழக்கம்.   நவசக்தி அர்ச்சனை மிகவும் சிறப்பானது ஆகும்.  ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒரே நேரத்தில் ஒன்பது வகை மலர்களல் ஒன்பது சக்திகளை அர்ச்சிப்பதன் பெயர் நவசக்தி அர்ச்சனை ஆகும்.