ஆடி மாதம் சில தகவல்கள் – 17

ந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்

ஏற்கனவே சில கோவில் திருவிழாக்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளோம்.

இன்று மேலும் சில தகவல்களை காண்போம்

புதுச்சேரி அருகே கடலோரம் அமைந்துள்ளது வீராம்பட்டினம்.  இங்குள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி அன்றும் விசேஷ பூஜை நடைபெறும்.    இந்த நாட்களில் அம்பாள் திருவீது உலா வருவது விசேஷமாகும்.   இந்த கோவிலின் ஆடித் தேரோட்டம் அன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளி அன்று மூன்று காலமும் மூன்று விதமான பூஜைகள் நடைபெறுகின்றன.   அம்பாள் காலையில் லட்சுமி ஆகவும் மத்தியானம் பார்வதி தேவியாகவும் மாலை சரஸ்வதி ஆகவும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.