ஆடி மாதம் சில தகவல்கள் – 13

இந்துக்களின் புனித மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு கோவிலிலும் விதம் விதமாக திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

நேற்று திருவிழாக்கள் குறித்த சில தகவல்களைப் பார்த்தோம்.

இன்று மேலும் சில தகவல்களை காண்போம்

சென்னை திருநின்றவூரில் நாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் பக்தர்கள் மஞ்சள் ஆடை தரித்து சக்தி மாலை அணிந்து ஆடி மாதத்தில் ஒரு மண்டலம் விரதம் இருந்தால் நினைத்தது கை கூடும்.

கோவை ஈச்சனாரியில் மகாலட்சுமி கோவில் உள்ளது.  இந்த கோவிலில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினசரி அலங்காரம் நடக்கும்.   நான்காம் வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள்,  ஐந்தாம் வாரம் பழவகைககளால் அலங்காரம் நடத்துவார்கள்.

திருநெல்வேலியில் உல்ல திருபுர சுந்தரி பைரவியையும்,  மகா மாரியமனையும்  ஆடி மாதத்தில் வணங்குவது சகல சௌபாக்கியத்தையும் அளிக்கும்.